நான்கு வழிச்சாலை பணிகளில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது என விஜய் வசந்த் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்.பி , எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால், மூன்று மாதத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியது, பாஜக அரசு எந்த அளவிற்கு இந்த மக்களைப் புறக்கணிக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுநாள் வரை நான்கு வழிச்சாலைகள் குறித்து பேசாத பொன் ராதாகிருஷ்ணன், இப்போது இந்த பணிகள் துவங்கப்பட உள்ளதைத் தெரிந்து கொண்டு அதைப்பற்றி இவ்வாறு பேசுகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளை முடிக்க தமிழக முதலமைச்சரை சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் பலனாக, ரூ.1150 கோடி மறு டெண்டர் விடப்பட்டுள்ளது. 80 கிலோ மீட்டர் தொலைவிற்கு கல், மண் எடுக்க அனுமதி பெறப்பட்டு இந்த பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பொருத்தவரை, இந்த பணிகள் அவ்வளவு சுலபமானதாக இல்லை. அது குறித்து மறு டெண்டர் விடப்பட்டு அதற்குரிய பணிகளும் நடந்து வருகிறது. இதனை மத்திய அரசு வேகப்படுத்தாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது. மேலும் நாகர்கோவில் அருகே சுங்கச்சாவடியில் குறைவான கட்டணம் வசூலிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.