முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் மருத்துவமனையில் அனுமதி..!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். இவருக்கு தற்போது 95 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தநிலையில் திடீரெனெ உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பழனியம்மாள் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஓ.பி.எஸ், உடனடியாக போடியில் இருந்து தேனி வந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு உள்ள தாயாரை நேரில் பார்த்து விட்டு பின்னர் மருத்துவரிடம் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இதனையடுத்து பெரியகுளம் சென்ற அவர் தனது தாயார் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவரது உடல் நலம் குறித்து கண்காணிக்க தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இங்கேயே தங்க போவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாணி ஜெயராம் மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

Jayasheeba

கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் 11ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை!

Saravana

ம.நீ.ம அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமனம்: கமல்ஹாசன் அறிவிப்பு

Gayathri Venkatesan