”ஓபிஎஸ் – டிடிவி கூட்டணி; அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை” – தமிழ் மகன் உசேன்!

ஓபிஎஸ் – டிடிவி கூட்டணி நிச்சயமாக அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது என அக் கட்சியின் அவைத்தலைவர் அ.தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜீவ் காந்தி…

ஓபிஎஸ் – டிடிவி கூட்டணி நிச்சயமாக அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது என அக் கட்சியின் அவைத்தலைவர் அ.தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முன் அக் கட்சியினர் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக அவைத்தலைவர் அ.தமிழ் மகன் உசேன், அமைப்பு செயலாளர் பால கங்கா மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, தமிழ் மகன் உசேன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அதிமுகவின் தொடக்க கால தொண்டன் என்ற அடிப்படையில் எனக்கு அவைத்தலைவர் பொறுப்பை எடப்பாடி அளித்துள்ளார். ஏற்கனவே தர்கா சென்று துவாக்கள் செய்து வருகிறேன், இன்னும் இந்தியா முழுவதும் 70 தர்கா சென்று துவா செய்ய உள்ளேன்.

ஓபிஎஸ் யாருடன் இணைந்தாலும் அது அதிமுகவை பாதிக்காது, ஓபிஎஸ் – டிடிவி கூட்டணி நிச்சயமாக அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது.

இவ்வாறு தமிழ் மகன் உசேன் பேட்டி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.