சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், கட்சியும், சின்னமும் தங்களிடம் தான் இருப்பதாகவும், தேர்தல் ஆணையமும் இதை உறுதி செய்துள்ளதாகவும் வாதிட்டனர்.பொதுக்குழு தீர்மானம் செல்லாது எனவும் பொதுச்செயலாளராக எந்த கூட்டத்தையும் கூட்டாததால் அதில் பதவிகளை உருவாக்கி அறிவிக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என சசிகலா தரப்பு வாதிட்டது. இந்த நிலையில் 4வது கூடுதல் உரிமையியல் நீதிபதி ஸ்ரீதேவி இன்று விடுமுறை என்பதால் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.