‘தொழில் வளர்ச்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தேவை’

தொழில் வளர்ச்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தேவை என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை வந்தவாசி வரை விரிவாக்கம் செய்ய…

தொழில் வளர்ச்சிக்கு நிலம் கையகப்படுத்துவதில் ஒத்துழைப்பு தேவை என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை வந்தவாசி வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ. அம்பேத்குமார் கோரிக்கை விடுத்தார். இதே போன்று, கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியில் புதிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அரசு முன்வருமா என துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு, நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு முன்னெடுக்கும் போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்,

அண்மைச் செய்தி: ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வைத்த கோரிக்கை’

அவ்வாறு ஒத்துழைப்பு தந்தால்தான் புதிய தொழிற்பூங்காக்களை அமைப்பது பற்றி அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலம் 2016-ல் தனியாரால் துவக்கப்பட்டதாகவும், அதை விரிவாக்கம் செய்வது பற்றி சூழலைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.