நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர், ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 14வது நாளாக நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. தொடர்ந்து மாநிலங்களவையும், மக்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தலைமையில் பேருந்தில் ஏறி ஜந்தர் மந்தருக்கு சென்று, அங்கு விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் விவசாயிகளை சந்தித்து ஆதரவு வழங்கினர்.