ஒவ்வொரு நிகழ்விலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவபடத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது;
மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். இவர் நெஞ்சுக்கு நேராக பீரங்கிகள் வைத்து போரிட்ட போதும், அவர் அதனை தைரியமா எதிர் கொண்டவர். இன்றைக்கு விசாரணை என்று அனுகியவுடன் ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டது அவரைப் போல் அழகு முத்துக்கோன் இல்லை. இன்றைய இளைஞர்கள் வேறு விதமான நபர்களை வீரர்கள் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவரை போல் உள்ளவர்கள் தான் வீரர்கள்.
புதுச்சேரியில் கேஸ் சிலிண்டர் மானியமாக 300 ரூபாய் கொடுக்க உள்ளதாக அரசாணை வெளியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் 100 ரூபாய் கொடுக்க உள்ளதாய் கூறினார்கள். இன்னும் அதை பற்றி சத்தம் எதும் இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகும் இவர்கள் திட்டங்கள் மட்டும் தான் அறிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து உதவி தொகை விடுபட்ட நாட்களுக்கு, பெண்களுக்கு அந்த தொகையை வழங்க வேண்டும்.
இங்கு உள்ள நிலைமையை எடுத்து சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இதேபோல் 50 வருடங்களுக்கு முன்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆளுநர் வேண்டாம் என கடிதம் எழுதுதினார். அரை நூற்றாண்டாக கடிதம் மட்டும் தான் திமுகவினர் எழுத வேண்டும். ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது நடவடிக்கை பிடிக்காவிட்டால் கருத்துக்கள் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு நிகழ்விலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா