தமிழ்நாட்டில் 56 சதவீதம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடங்கிவைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசின் கடுமையான முயற்சிகளால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 56 சதவீதம் பேர் முதல் தவணையும், 17 சதவீதம் பேர் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், கடந்த பல மாதங்களாக பல துறைகள் இனைந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.







