இந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 616 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 17,983 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,24,419 ஆக அதிகரித்துள் ளது.
தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,46,658 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 28,046 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதை யடுத்து, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,76,319 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 3,01,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 84,89,29,160 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71,04,051 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது .







