என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். நடிகராகவும் தன் திறமையை காட்டிய எஸ்.பி.பி, கொரோனா காரண மாக கடந்த ஆண்டு இதே நாளில், சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.
அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திரையுலகினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் #spbalasubrahmanyam என்ற ஹேஷ்டேக்கில் அவர் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவருடைய பாடல்கள் மற்றும் பேட்டிகளை பகிர்ந்து வருகின்ற னர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில், என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர் என்று கூறியுள்ளார்.
ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார். pic.twitter.com/xnmWcXonw2
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2021
‘ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாக வே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால்தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர், சாரீரமாக நம்மோடு உலவுகிறார்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இவரைப் போல பல நடிகர், நடிகைகளும் எஸ்.பி.பிக்கு சமூக வலைதளத்தில் புகழஞ்சலி செய்து வருகின்றனர்.







