முக்கியச் செய்திகள்

மீண்டும் ஆன்லைன் தேர்வு; அமைச்சர் பேட்டி

அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கடந்த
2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீனாவில் வூகான் மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சீனாவில் இருந்து வந்த அவருக்குத்தான் முதன் முதலாக நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. படிப்படியாக தொற்று வேகம் அதிகரித்தது. இதனை தடுக்கும் நோக்கில், ஊரடங்குகள் போடப்பட்டன.

மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் கல்வி முறை செயல்பாட்டிற்கு வந்தது. பள்ளி, கல்லூரிகள் இயல்பு நிலைக்கு திரும்பி இயங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது ஆன்லைன் தேர்வுகள் நடத்துவது குறித்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பின் செய்தியாளர் சம்ந்திப்பில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பிப்ரவரி 1-ல் இருந்து பிப்ரவரி 20 வரை அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும் எனவும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக்கில் பங்கேற்க டோக்கியோ சென்ற வீரருக்கு கொரோனா தொற்று!

Vandhana

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 15ஆயிரம் டன் அரிசி

Web Editor

மதம் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது – ஜக்கி வாசுதேவ்

Gayathri Venkatesan