மக்களுக்கு பிடித்த தலைவர் மோடி – சர்வதேச ஆய்வு நிறுவனம்

மக்களால் அதிகம் ஏற்கப்படும் சர்வதேச தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாக மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 13…

மக்களால் அதிகம் ஏற்கப்படும் சர்வதேச தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாக மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் அரசை நடத்தும் தலைவர்கள், அந்த அந்த நாட்டு மக்களால் எந்த அளவு ஏற்கப்படுகிறார்கள் என்பது குறித்து மார்னிங் கன்சல்ட் என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம், தொடர் ஆய்வை மேற்கொண்டது.

அதன் முடிவுகளை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, 71 சதவீத மக்களால் ஏற்கப்பட்டு முதல் இடம் பிடித்துள்ளார்.மெக்ஸிகோ அதிபர் ஆன்ட்ரெஸ் மானுவேல் 66 சதவீதம் அளவுக்கு மக்களால் ஏற்கப்பட்டு இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, 60 சதவீத மக்களால் ஏற்கப்பட்டு மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 43 சதவீத மக்களால் ஏற்கப்பட்டு 6ம் இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவீத மக்களால் ஏற்ப்பட்டு, 69 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்டு கடைசி இடமான 13ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று, மார்னிங் கன்சல்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.