சேலம் 8 வழிச்சாலை வழக்கு-அடுத்தக்கட்ட நடவடிக்கை

சேலம் 8 வழிச்சாலை பணிகள் குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட…

சேலம் 8 வழிச்சாலை பணிகள் குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் நடைபெற்று வரும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 4ஆயிரத்து 600 மீட்டர் நீர்வழிப் பாதையில், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் எனவும் தெரிவித்தார். சென்னையில் வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அளித்துள்ள அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, விரைவில் பணிகள் நடைபெறும் எனக்கூறினார்.

மேலும், சேலம் 8 வழிச்சாலை குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், முதலமைச்சரின் அறிவுறுத்தல் பேரில், அடுத்தகட்ட பணிகள் நடைபெறும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், அதிமுக ஆட்சியில் இந்த சென்னை-சேலம் இடையே வரப்போகும் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.