குடியரசு தினவிழாவை முன்னிட்டு 130 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.
ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி
சார்பில் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை
ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா துவக்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் 5 வயதுக்கு மேற்பட்ட 130 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் சுற்றினர். இறுதியில் தற்காற்பு கலைகளையும் செய்து அசத்தினர். இதனை குளோபல் வேர்ல்ட் ரெக்கார்டு அமைப்பின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் உதய் மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் நடுவராக இருந்து மேற்பார்வை செய்தனர்.
2 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த பள்ளி 130 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஓசூர் பகுதியை சேர்ந்த
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
– யாழன்