காதலியுடன் மோதல் விவகாரம் வெளிவந்ததையடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடருக்கான வர்ணனையாளர் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்கை அவரது காதலி ஜேட் யார்ப்ரோ கண்ணத்தில் அறையும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குயின்ஸ்லாந்தில் விடுமுறை தினத்தன்று நூசாவில் உள்ள ஒரு உணவகத்தில் மைக்கேல் கிளார்க், அவரது காதலி டேஜ் யார்ப்ரோ மற்றும் ஜேட் யார்ப்ரோவின் சகோதரி ஜாஸ்மின் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது உணவகத்தில் வெளியே கிளார்க்குக்கும் அவரது காதலி ஜேட் யார்ப்ரோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி கிளார்க்கின் கன்னத்தில் ஜேட் யார்ப்ரோ அறையும் காட்சி பதிவாகியிருந்தது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு மைக்கேல் கிளார்க், இந்த மோதலுக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது செயல்களால் நான் மனமுடைந்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து, நூசா பூங்காவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக கிளார்க் மற்றும் ஜேட் யார்ப்ரோவுக்கு குயின்ஸ்லாந்து போலீசார் அபராதம் விதித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடருக்கான வர்ணனையாளர் ஒப்பந்தத்தை தற்போது பிசிசிஐ ரத்து செய்துள்ளது. இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட வர இருக்கிறது. இந்த போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய தரப்பில் மைக்கேல் கிளார்க் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மற்ற வீரர்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மார்க் வாக்கும், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மிச்செல் ஜான்சனும் வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 3 ஒருநாள் போட்டிகளுக்கு மிச்செல் ஜான்சனுடன் ஆரோன் பின்ச் இணைந்து வர்ணனை செய்யவிருக்கிறார்.