டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப்போட்டி பிரிவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
ஜப்பான் நாட்டின் தலைநகரம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில், பாய்மர படகுப்போட்டியின் மகளிர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த 23 வயதான நேத்ரா குமணன் மகளிர் ஒற்றையர் லேசர் ரேடியல் பிரிவில் களமிறங்குகிறார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவிலிருந்து பாய்மர படகுப்போட்டிக்கு தகுதி பெறும் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
வருண் மற்றும் கணபதி இருவரும் இணைந்து 49er பிரிவில் களமிறங்குகின்றனர்.வேலூரை சேர்ந்த விஷ்ணு சரவணன் மும்பையிலிருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி, பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று ஓமனில் நடைபெற்றது.
முஷ்ஷனா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்த நான்கு வீரர்களும் இந்தியா சார்பில் களம்கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.