முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள் விளையாட்டு

புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஓட்டம் அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமாவில் இருந்து இன்று தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பூசி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்நிலையில் டோக்கியோவில் வரும் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.


இதனையெடுத்து ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் இன்று ஜப்பானின் வடகிழக்கும் பகுதியில் அமைந்துள்ள அணு உலை கதிர்வீச்சு வெடிப்பால் பாதிக்கப்பட்ட புகுஷிமா பகுதியில் உள்ள ஜி கிராமத்திலிருந்து தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் தீபத்தை ஜப்பான் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர் நோரியோ சசாகி முதல் நபராகத் தீபத்தை ஏந்தி ஒலிம்பிக் தீப ஓட்டத்தைத் தொடங்கிவைத்தார். இவர் 2011-ம் ஆண்டு ஜப்பான் பெண்கள் கால்பந்து அணி உலகக் கோப்பை வெல்லக் காரணமாக இருந்தவர். ஜப்பானில் உள்ள 47 மாகாணங்களில் மொத்தம் 121 நாட்கள் இந்த ஒலிம்பிக் தீப ஓட்டம் நடைபெறவுள்ளது. இதனை 10 ஆயிரம் பேர் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்வார்கள்.

வழக்கமாக ஒலிம்பிக் தீப ஓட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஒலிம்பிக் தீப ஒட்டம் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஜப்பானில் மிக எளிமையான முறையில் ஒலிம்பிக் போட்டிக்கான தீபத் தொடர் ஒட்டம் நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: தோல்வியை தவிர்க்க இந்திய அணி போராட்டம்!

Gayathri Venkatesan

குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா.. தடுப்பூசி எடுத்துக் கொள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி கோரிக்கை

Halley karthi

முன்னாள் அமைச்சருக்கு சிறை; மருத்துவமனையில் அனுமதி

Halley karthi