தோப்புக்கரணம் போட சொல்லி கண்டித்த ஆசிரியர் | மயங்கி விழுந்து 4ஆம் வகுப்பு மாணவன் பலி!

ஒடிசாவில் தோப்புக்கரணம் போடும்போது பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஓரலி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த…

ஒடிசாவில் தோப்புக்கரணம் போடும்போது பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், ஜாஜ்பூர் மாவட்டத்திலுள்ள ஓரலி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த ருத்ர நாராயண் என்ற மாணவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பள்ளி வளாகத்தில் விளையாடி வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து,  பள்ளி வகுப்பு நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்ததால், அந்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும், அதற்கு தண்டனையாக மாணவர்களை தோப்புக்கரணம் போட வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:தொடரும் மழை : தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

இந்த நிலையில்,  தோப்புக்கரணம் போடும்போது ருத்ர நாராயண் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். மேலும், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.