தேனியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நவம்பர் 23 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 15 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 23 ) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.







