“களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது” – சீமான் விமர்சனம்!

களத்திற்கே வராத விஜய், களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

ஈரோடு மக்கள் சந்திப்பின்போது “திமுகவை தீயசக்தி என்றும், தவெகவை தூய சக்தி என்றும் தவெக தலைவர் விஜய் பேசியது பேசுபொருளானது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் களத்தில் இருப்பவர்களுடன்தான் போட்டி, களத்தில் இல்லாதவர்களுடனும், களத்திற்கே சமந்தம் இல்லாதவர்களை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது,

“கட்சி ஆரம்பித்துவிட்டு, ஈரோடு கிழக்கு மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் நின்றிருக்கலாமே? களத்தில் யார் இருக்கிறார்கள்? அவர் (விஜய்) பேசுவதையெல்லாம் சிரித்துவிட்டு கடக்க வேண்டும். தவெக வைத்திருக்கும் தலைவர்களுக்காக ஓட்டு இல்லை. அதிமுக-வில் எம்ஜிஆர், திமுக-வில் கருணாநிதி கொடியில் வைத்திருக்கிறார்கள் என்றாலும் ஓட்டு அவர்களுக்காக இல்லை. குடுக்குற நோட்டுக்குத்தான் ஓட்டு. அப்படியென்றால் காந்தி நோட்டுக்குத்தான் ஓட்டு. களத்திற்கே வராத விஜய், களத்தைப் பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக உள்ளது”

இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.