நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு தடைகோரி இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நீர் நிலைகள் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர். தமிழ்நாடு நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய மேலும் 3 வாரங்கள் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







