#Diwali பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய பென்னாகரம் ஆட்டுச் சந்தை | ரூ.5 கோடிக்கு விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாரச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது.…

On the occasion of Diwali festival, Pennagaram weekly market Rs. Goats were sold for 5 crores.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாரச் சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பென்னாகரம் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் சந்தைதோப்பு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இன்று தீபாவளியை முன்னிட்டு ஆட்டு சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதையும் படியுங்கள் : சென்னை ரயில் நிலையங்களில் இன்றும், நாளையும் #Platform டிக்கெட் விற்பனை ரத்து!

சேலம், ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவின் சித்தூர், கர்நாடகாவின் பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர். இந்நிலையில், இன்று சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகியுள்ளன. ரூபாய் 4000 முதல் ரூ.15,000 வரை ஆடுகள் விற்பனையாகின. இதனால், பென்னாகரம் பகுதி ஆடு விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.