மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் வெற்றிக்கு எதிரான வழக்கு : பிப்.11ம் தேதிக்கு ஒத்திவைப்பு………..!

2011 சட்டமன்றத் தோ்தலின் போது மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கின் விசாரணையானது பி. 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலின் போது கொளத்தூரில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் தரப்பில் போது தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்ததாகவும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார் . மேலும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வலியுறுத்தினார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமானது கடந்த 2017-ம் ஆண்டு , 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேலுமுறையீட்டு வழக்கு தொடர்பான இறுதி விசாரணையானது நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது.

அப்போது சைதை துரைசாமி தரப்பில் தேர்தலின் போது ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்ற தொகையை மீறி அதிக அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது எனவும் தேர்தல் செலவினக்கணக்கில் கூட எதிர் தரப்பினர் குளறுபடிகளை செய்திருக்கிறார்கள் எனவும் வாதிடப்பட்டது. அதே நேரம் சைதை துரைசாமி தரப்பின் குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் தரப்பில் மறுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.