மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சிறுமைப்படுத்துவதா? ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை…

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை ஆளும் அரசை குறிப்பிடும் போது, இந்திய அரசு என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும், ஆனால், தற்போது அமைந்துள்ள திமுக அரசு, ஒன்றிய அரசு என குறிப்பிடுவதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு சட்டப் பேரைவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தீர்மானங்களில், இந்திய பேரரசு என குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிடுவது தாய்நாட்டை கொச்சைப்படுத்துவது போல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடன் இணக்கமாக சென்று தமிழ்நாட்டின் நலன்களை வென்றெடுக்க, நடவடிக்கை எடுக்காமல், ஒன்றிய அரசு என சிறுமைப்படுத்துதை ஏற்றுக்கொள்ள முடியாது, என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.