டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக சென்ற செர்பியாவைச் சேர்ந்த வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள வீரர்கள், 3 வாரங்களுக்கு முன்னதாகவே ஜப்பான் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபடுவார்கள். இதற்காக, செர்பியாவைச் சேர்ந்த துடுப்புப் படகு போட்டி வீரர்கள் விமானம் மூலம் டோக்கியோ சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டோக்கியோ விமான நிலையத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் விமானத்தில் பயணித்த 4 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் பரிசோதனை நடைபெறவுள்ளதாக ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.