எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் நோட்டீஸ்

அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக…

அதிமுக தொடங்கப்பட்ட நோக்கத்திற்கு எதிராக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு, அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என கூறும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து அண்மையில் அதிமுக கட்சி கொடி, பெயர் பயன்படுத்தியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில், அந்த நோட்டீஸுக்கு பதிலளித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், பொதுக்குழுவால் தன்னை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ய அடிப்படை உறுப்பினர்களுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், தேவையற்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வந்தால் அவதூறு வழக்கு தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.