போடிநாயக்கனூரில், 12-ம் கட்ட பரப்புரை மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி நாயக்கனூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி, அவர், தமது 12-ம் கட்ட தேர்தல் பரப்புரையை, போடிநாயக்கனூர் நகரின் மையப்பகுதியான புதூர்சாமி தோட்டம், டிவி.கே.கே. நகர், சுப்புராஜ் நகர், புதுகாலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, புதூரில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாக தெரிவித்தார். மேலும், அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களையும் பட்டியலிட்டு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.







