சென்னையில் வரும் 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை

சென்னையில் வரும் 20-ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும்…

சென்னையில் வரும் 20-ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கவும்: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… 9வது திருமணம் செய்த பெண்ணுக்கு போலீஸ் வலை வீச்சு!

இதே போல் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல் 3 நாட்களுக்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வரும் 20ம் தேதி பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் பிப்ரவரி 20-ம் தேதி திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.