கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்தரபாத் சென்ற கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் உள்ள செகந்தரபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் பி.பி.…

விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்தரபாத் சென்ற கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் உள்ள செகந்தரபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் பி.பி. நகர் என்ற பகுயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 6 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டன. இதனால், பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோதாவரி ரயில் தடம் புரண்டதால் அவ்வழியாகச் செல்லக்கூடிய ரயில் சேவை பாதிக்கபட்டுள்ளது. இதனால், புவனகிரி, பி.பி.நகர் உள்ளிட்ட ரயில் நிலையத்தில் பல்வேறு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.