அதிமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்: கனிமொழி

தமிழக மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத அதிமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தேர்தல் பரப்புரையின் போது பேசியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி…

தமிழக மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாத அதிமுக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி தேர்தல் பரப்புரையின் போது பேசியுள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித் தமிழர் பேரவை, கொங்கு நாடு மக்கள் கட்சி முதலிய கட்சிகள் இருக்கின்றன. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் மாரிமுத்து போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கனிமொழி பேசியபோது, ’திமுகவுக்கு வெற்றி உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது. திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணியாக இருக்கிறது. தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளாத ஆட்சி தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு தமிழ் நாட்டில் வேலை வாய்ப்புகள் இல்லாத சூழல் நிலவுகிறது’ என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.