செய்திகள்

6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2.20 லட்சம் பேர் மீது வழக்கு!

தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது ரூ. 2.20 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக மால்கள், திரையரங்குகள், சாலைகளில் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் சுற்றித் திரிவோரிடம் உடனடியாக 200 ரூபாய் அபராதம் விதிக்குமாறு மாநகராட்சி அறிவித்ததையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அபராத தொகையை பெற்று வருகின்றனர். 

இதுமட்டுமின்றி வாகனங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து அபராதத்தை போக்குவரத்து காவல் துறையினர் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 45, 049 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 2, 20, 806 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல தனி மனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தமிழகம் முழுவதும் 9,007 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக கொரோனாவின் 2 ஆம் அலை வேகமாக பரவிவரும் தலைநகர் சென்னையில் காவல் துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 1,284 வழக்குகள் பதியப்பட்டு 2,56,800 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது சென்னை காவல் துறை சார்பில் 4, 874 வழக்குகள் பதியப்பட்டு 9,74, 800 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறையின் சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Advertisement:

Related posts

தமிழகத்தில் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Gayathri Venkatesan

கொரோனா தடுப்பூசி கோரி நேற்று ஒரே நாளில் 29 லட்சம் பேர் விண்ணப்பம்!

Karthick

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கைது!

Niruban Chakkaaravarthi