ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த ஓசூர் மக்களுக்கு, திடீரென பெய்த ஆலங்கட்டி மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ஓசூர் அடுத்த சூளகிரி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக சூளகிரி பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசி அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குளிர்ச்சி நிலைக்கு கொண்டு சென்றது. இது கடந்த ஒருமாத காலமாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட அப்பகுதி பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.







