முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: உயர்நீதிமன்றம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவில்லை என கூறி வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும், ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அறிவு , திறமை, தொழில்நுட்ப அளவில் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும். தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் எனவும் கருத்து தெரிவித்தார்.

முகப்புப் படம்; கோப்புப் படம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹெச்.ராஜா மீதான விசாரணை உட்கட்சி விவகாரம்: எல்.முருகன்

EZHILARASAN D

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: உறவினர் மீது போக்சோ வழக்கு

Halley Karthik

தொடர் உயிரிழப்பு: கிணற்றை மூட மக்கள் கோரிக்கை

Halley Karthik