முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு தமிழகம்

ஆசிரியர் பணி நியமனம், போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும்; தமிழ்நாடு அரசு

ஆசிரியர் பணி நியமனம், போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் பிற துறைகளின் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்குக் கடந்த அக்டோபர் 19ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.

இதற்கு முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்துள்ள பதிலில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக பணிநியமனம் செய்யப்படும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் அளித்துள்ள பதிலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி எனவும், போட்டித் தேர்வு மூலம் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்போது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!

விவேக் நினைவாக 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் இயக்கநர் செல்வகுமார்!

Gayathri Venkatesan

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி?

Jayapriya