முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழு தலைவரை மாற்ற வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளும், மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளும் சரிவர பின்பற்றப்படுவதில்லை எனவும், அணையை பலப்படுத்தும் பணிகளை செய்ய கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து, அணையின் மேற்பார்வை கண்காணிப்பு குழு தலைவரை மாற்ற வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மேற்பார்வை குழுவின் தலைவரை மாற்றக்கூடிய சூழல் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்தனர்.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த அனைத்து விவகாரங்களிலும் மேற்பார்வை குழு முடிவு செய்யும் எனக்கூறிய நீதிபதிகள், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினர்.