முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவில் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
மதுரை ஒத்தகடையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் மாநில அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் முன்கள பணியாளர்களாக வேலை செய்பவர்கள், கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் வேலைகள் குறித்து விதிமுறைகள், திட்டங்கள் வகுக்கலாம் எனக் கருத்து கூறி வழக்கை முடித்து வைத்தனர்.