முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்

தடுப்பூசி பற்றாக்குறை நாடாக இந்தியா மாறிவிட்டது: பிரியங்கா காந்தி விமர்சனம்

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நாடாக மாறிவிட்டது, என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தடுப்பூசி திட்டம் என்பது தொடக்கத்தில் இருந்தே, பிரதமர் மோடியின் தனிப்பட்ட விளம்பரத்துக்கான கருவியாகவே பயன்படுத்தப்பட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் மட்டும்தான் உள்ளது என்றும், மற்ற பொறுப் பெல்லாம் மாநிலங்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது என்றும் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, தற்போது தடுப்பூசிகளுக்கு வெளிநாடுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது என்றும், ஆறரை கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்ததே இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தடுப்பூசி திருவிழாவுக்கு பிறகு, தடுப்பூசி போடுவதில் 83 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி பற்றாக்குறை நாடாக தற்போது இந்தியா மாறிவிட்டது என்றும், பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று!

Halley karthi

ஒலிம்பிக் கிராமத்தில் இரு வீரர்களுக்கு கொரோனா

Niruban Chakkaaravarthi

அரசு காலி பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி!

Gayathri Venkatesan