தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தமிழகத்தின் 7 துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், 2 துறைமுகங்களில் 2-ஆம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் இன்று காலை அர்நாப் புயல் உறுவான நிலை சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உறுவான அர்நாப் புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமைழகத்தில் 7துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல

பாம்பன் மற்றும் தூத்துக்குடியில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இன்று காலை 9 துறைமுகங்களிலும் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பின்னர் அர்நாப் புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என இந்திய வானிலி ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் 7 துறைமுகங்களில் அது 3-ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.