திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, “திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெ*டிக் கொல்*ப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொ* நடந்திருக்கிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அ*வாள் வெ*டு, சி*மிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது.
சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




