பிரெஞ்ச் ஓபன் 2026: போராடி வீழ்ந்தார் பி.வி. சிந்து!

பிரெஞ்ச் ஓபன் இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீராங்கனை அன் சே யங்கிடம் பி.வி. சிந்து போராடி வீழ்ந்தார்.

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தென் கொரியாவின் அன் சே யங்கை எதிர்த்துப் விளையாடினார்.

பி.வி சிந்து முதல் செட்டில் அபாரமாக ஆடி அன் சே யங்கை திணறடித்து 21-16 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கேமில் தனது ஆட்டத்தை மாற்றியமைத்த அன் சே யங், சிந்துவை 21-11 என தோற்கடித்தார். வெற்றியை தீர்மானம் செய்யும் மூன்றாவது கேமில் சிந்து சிறப்பாகத் தொடங்கி 8-5 என முன்னிலை பெற்றார். இருப்பினும், அன் சே யங் தனது பவர்ஃபுல் ஸ்மாஷ்கள் மற்றும் சாதுரியமான நெட் ஷட்டுகள் மூலம் ஆட்டத்தைத் தன்வசப்படுத்தினார். இறுதியில் 21-12 என மூன்றாவது கேமை வென்று கோப்பையைக் கைப்பற்றினார். இதன் மூலம் அன் சே யங் தனது மூன்றாவது தொடர்ச்சியான பிரெஞ்ச் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் சிந்துக்கு எதிரான தனது மோதல்களில் 11-0 என்ற கணக்கில் அன் சே யங் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தைத் தொடர்கிறார். இதற்கு முன்பு 2023 ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டுமே சிந்து அவருக்கு எதிராக ஒரு கேமை வென்றிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.