பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாமல், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







