தை அமாவாசை; ராமேஸ்வரத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய சாமி தரிசனம் செய்தனர். அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு…

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில்
பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய சாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதை அமாவாசை திதி என்பர். ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அண்டு தை அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. தை அமாவாசை தினத்தில்
மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும் என நம்பப்படுகிறது.இந்த நிலையில் இன்று தை அமாவாசை முன்னிட்டு தமிழகம் மற்றும் பல்வேறு
மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காக ராமேஸ்வரத்தில் குவிந்தனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து ராமநாதசாமி திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில்
நீராடியும் மற்றும் இராமநாதசாமி ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளை பல மணி நேரம்
நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சிரமமின்றி புனித தீர்த்தங்களில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல பக்தர்களின் வசதிக்காக குடிநீர் ஏற்பாடுகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சிநிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.