மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வெள்ளாளன் கோட்டை, வலசால்பட்டி, பெரியசாமிபுரம், பல்லாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து யார் மீதும், யாரும் வீண் பழி சுமத்தவில்லை என்றார். ஜெயலலிதா மரணத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதற்காகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்றும், அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
சசிகலாவை, அதிமுகவில் இணைப்பது குறித்து, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒங்கிணைப்பாளரும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.







