அதிமுக-சிறுபான்மை மக்கள் இடையேயான உறவை யாராலும் சிதைக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையேயான உறவை யாராலும் மாற்ற முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில்…

அதிமுகவிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையேயான உறவை யாராலும் மாற்ற முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ரமலான் நோம்பு மேற்கொண்டுள்ள அனைவருக்கும் என் அன்பு தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக என்றும் விளங்கும் என்பதை தெரிவித்துக் கொளௌகிறேன். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். எம்ஜிஆர்-ம், ஜெயலலிதாவும் சிறுபான்மை மக்களை எவ்வித சமரசங்களுக்கும் இடமின்றி பாதுகாத்து வந்துள்ளனர். அதே வழியில் எப்போதும் செயல்படுவோம். அதிமுகவிற்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் சிதைக்க முடியாது என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், நாகூர் தர்கா, சந்தன கூடு திருவிழாவிற்கு தேவையான சந்தன கட்டைகள் ஆண்டு தோறும் இலவசமாக கொடுத்தது அதிமுக அரசு. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களின் நலனாக அதிமுக இருந்தது.

இஸ்லாமியர்களின் 5 பெரும் கடமைகளில் ஒன்றாக நோன்பை பின்பற்றும் இஸ்லாமியர்கள், இச்சைகளை வென்று இறைவன் நிழலில் வாழ்கிறீர்கள். உங்களோடு நானும் இறைவனை வேண்டி கொள்கிறேன்.

சில காட்சிகளை போல பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, சிறுபான்மையினர் மக்களின் வாக்குகளை ஏமாற்றும் கட்சி அல்ல அதிமுக. கூட்டணி என்பது வேறு! கொள்கை என்பது வேறு! கொள்கை என்பது ஒருவருடைய இன்சியல் போல அதை ஒருபோதும் மாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.