பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!

சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலங்களுக்கு அதிகாரமில்லை, மத்திய அரசின் உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது என்று கூறி மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ஏற்கெனவே தரவுகள் வெளியாகிவிட்டன. இனிமேல் தடை விதிக்க முடியாது.

மேலும், மாநிலங்களின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தடை விதிக்க முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்’ என்று கூறினர்.

பீகார் அரசு இந்த வழக்கு குறித்து விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பி வழக்கை வரும் ஜனவரி மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.