உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல் -8 வயது சிறுவன் உள்ளிட்ட 51 பேர் பலி…

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட 51 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா – உக்ரைன் போர் தொடருவதால் இரு தரப்பிலும் ஏராளமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைனின்…

உக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட 51 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடருவதால் இரு தரப்பிலும் ஏராளமான உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள குரோசா என்ற கிராமத்தில் உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் ஈமச் சடங்கு நடைபெற்றபோது ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் எட்டு வயது சிறுவன் உள்ளிட்ட 51 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட கிராமத்தில் ராணுவ இலக்குகள் எதுவும் இல்லை என்றும் ரஷ்யாவின் இந்த ஒரு தாக்குதலில் மட்டும் கிராமத்தில் இருந்த 20 சதவீதம் பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.