பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் பிகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் விலகுவதாகஅறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீங்கள் எனக்கு தொடர்ந்து நம்பிக்கையையும் ஆதரவையும் அளித்து வருகிறீர்கள், இதனாலே பிகார் மக்களுக்கு நாங்கள் உண்மையாக சேவை செய்து வருகிறோம். உங்களுடைய நம்பிக்கை, ஆதரவின் காரணமாகவே பிகார் இன்று வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்காக கடந்த காலங்களில் பலமுறை உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறேன்.
எனது நாடாளுமன்ற வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து பிகார் பேரவையின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே, இப்போது மாநிலங்களவை உறுப்பினராக வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.
உங்களுடனான இந்த உறவு எதிர்காலத்தில் தொடரும். வளர்ந்த பிகாரை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவேன் என நான் மனதார உறுதியளிக்கிறேன். புதிதாக அமையவுள்ள அரசுக்கு எனது முழு ஆதரவும் வழிகாட்டுதலும் இருக்கும்” என்றும் பதிவிட்டுள்ளார்.







