நாட்டையே உலுக்கிய நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகள் விடுதலை!

நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் கோலிக்கு மரணதண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உத்தரப் பிரதேச…

நிதாரி தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்தர் கோலிக்கு மரணதண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகில் நிதாரி பகுதியிலுள்ள ஒரு பங்களாவில் கடந்த 2006-ம் ஆண்டு குழந்தைகள் உள்பட 19 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையில் சிறுமிகள்,  இளம்பெண் உள்ளிட்ட 19 பேரையும் பாலியல்  வன்கொடுமை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பங்களாவின் உரிமையாளர் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் சுரேந்திர கோஹ்லி என்பரை சிபிஐ கைது செய்தனர்.  இதனைத் தொடர்ந்து,  பல்வேறு வழக்குகளில் மொனீந்தர் சிங்கிற்கும், கோஹ்லிக்கும் மரண தண்டனை வழங்கி கடந்த 2007-ம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில்,  நிதாரி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம்,  குற்றம் சாட்டப்பட்ட இருவரின் மரண தண்டனையும் ரத்து செய்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா மற்றும் எஸ்.எச்.ஏ.ரிஸ்வி ஆகியோர் அமர்வு,  குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சமர்பிக்காததால் அவர்களை விடுவிப்பதாக தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.