முக்கியச் செய்திகள் தமிழகம்

தேமுதிகவின் தேர்தல் வரலாறு; 2006 முதல் 2019 வரை

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ள நிலையில், அக்கட்சி இதுவரை சந்தித்த தேர்தல்களையும், அதன் முடிவுகளையும் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்

மதுரையில் 2005ம் ஆண்டு, மிக பிரம்மாண்டமாக தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். அதன்பின் 2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துக் களம் கண்டார். அப்போது விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில், வெற்றி கைகூடாவிட்டாலும், தேமுதிக கணிசமாக வாக்குகளைப் பெற்று மக்கள் நம்பிக்கையைப் பெற்றது. அந்த தேர்தலில் தேமுதிக 8.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது.

2009ல் நடந்த மக்களவைத் தேர்தலில், 39 தொகுதிகளில் மீண்டும் தனித்து களம் கண்ட தேமுதிக வெற்றியை ஈட்டாவிட்டாலும், 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, பெரிய கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

இதனால் 2011-ல் தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டு வந்தார் ஜெயலலிதா. அப்போது 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வென்றது தேமுதிக. அப்போது 7.9 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

பின்னர் அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததை அடுத்து, 2014 மக்களவைத் தேர்தலில், பாஜக, பாமகவுடன் கூட்டணி கண்டது. அப்போது 14 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு ஒன்றிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதே நேரத்தில் வாக்கு சதவிகிதமும் 5.1 ஆக குறைந்தது.

2016 சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி களம் கண்ட மக்கள் நலக் கூட்டணியில் 104 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்குவிகிதமும் 2.41 சதவீதமாக குறைந்தது.

2019 மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்த தேமுதிக, 4 தொகுதியில் போட்டியிட்டது. 4 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பை இழந்ததோடு, வாக்கு சதவிகிதமும் மிக அதலபாதாளமாக 2.19 சதவீதத்துக்கு சரிந்தது.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியை முறித்துக்கொள்வதாக தேமுதிக அறிவித்துள்ளது.

Advertisement:

Related posts

இந்தியாவுக்குள் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!

Jayapriya

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி!

Ezhilarasan

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது?

Saravana