பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து உள்ளதால், ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்பட்டது. அதன்படி மாவட்டங்களுக்கு இடையே, அரசு பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்க, அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
பேருந்துகளை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி, மும்முரமாக நடைபெற்று வருகிறது. உதகை போக்குவரத்து பணிமனையில், நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளை சரிபார்த்து, இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. நீலகிரியில் 250 அரசு பேருந்துகள், நாளை முதல் இயக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் இருந்து, துறையூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், சேலம், ஈரோடு, கோவை, போன்ற வெளியிடங்களுக்கு இயக்கப்பட உள்ளது.







